முன்னாள் அமைச்சர்களிடம் ஆசி பெற்ற திண்டுக்கல் அதிமுக வேட்பாளர்
திண்டுக்கல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் முன்னாள் அமைச்சர்களிடம் ஆசி பெற்றார்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் முபாரக் முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.அதிமுக சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் SDPI கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் முன்னால் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் ஆகிய இரண்டு பேரிடமும் வாழ்த்து பெற்றார்.
திமுக அரசின் மக்கள் விரோத கொள்கையால் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் நாங்கள் ஆட்சியை பிடிப்போம். நல்ல வேட்பாளரை பார்லிமென்ட்க்கு பொதுமக்கள் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல் தர்மயுத்தம் ஆக மாறும். இவ்வாறு வேட்பாளர் கூறினார்.