அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது விழா

அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது விழா
X

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 அரசுப் பள்ளிகள், அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அரசுப் பள்ளிகள், அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், மாநகராட்சி மேற்கு ரத வீதி தொடக்கப் பள்ளி, ஜே.புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகள் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன.

இந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஜெ.ஜெயந்தி பிளாரன்ஸ், பெ.சே.மணிமேகலை, த.ஜான்பிரிட்டோ ஆகியோா், திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற உள்ள விழாவில், அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதை பெறுகின்றனா்.

Tags

Next Story