திண்டுக்கல் : மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி

திண்டுக்கல் ஆக்னேஸ் மேரி தெருவில் மாநகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி 28 வது வார்டுக்குட்பட்ட ஆக்னேஸ் மேரி தெருவில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசுகையில் கொசு புழுக்களை அளிக்கும் கம்பூசியா மீன்கள் மாநகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது இதனை விருப்பமுள்ள பொதுமக்கள் பெற்று தொட்டியில் வளர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கொசு புழுக்கள் உருவாவது முற்றிலும் தடுக்கப்படும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காாமல் வைத்துக் கொள்வது நமது கடமை. மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வெளிப்புற பயன்பாட்டிற்கான தண்ணீர் தொட்டியை காற்று புக முடியாத வகையில் துணியால் இருக்க மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags

Next Story