மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்

மாசித் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா பிப்.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா பிப்.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ள திரிசூல வடிவிலான திருக்கம்பத்துக்கு நாள்தோறும் பால், பன்னீா், இளநீா் ஊற்றி வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் சூடச்சட்டி, தீச்சட்டி எடுத்து வந்து நோத்திக்கடன் செலுத்தினா். விழா நாள்களில் நாள்தோறும் தங்கமயில், வெள்ளியானை, சிம்மவாகனம் என பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா எழுந்தருளினாா். பிப்.28 செவ்வாய்க்கிழமை மாலை 7 மேல் திருக்கல்யாணமும், பிப்.28 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சோத்து விழாவை நிறைவு செய்ய உள்ளனா்.

Tags

Next Story