திண்டுக்கல் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா

திண்டுக்கல் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா

திமுக மாவட்ட செயலாளர் பிறந்த நாள் கொண்டாட்டம்


திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் பிறந்தநாளை தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழநி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் பிறந்தநாளை தி.மு.க.,வினர் கொண்டாடினர். பலரும் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்துக்கள் கூறி மாலை அணிவித்தனர். வத்தலக்குண்டு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகன் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் படம் அச்சடித்த டைரி வெளியிடப்பட்டது.

இதை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வெளியிட வத்தலக்குண்டு நகர கூட்டுறவு வங்கி தலைவர் கணேசன் பெற்றுக்கொண்டார். நகர செயலாளர் சின்னதுரை, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் உடன் இருந்தனர்.

நிலக்கோட்டையில் தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில, மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மாநில துணை அமைப்பாளர் ஜெயன், மாவட்ட அமைப்பாளர் பொன் முருகன், துணை அமைப்பாளரும் நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவருமான முருகேசன் ஏற்பாட்டில் திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா , தி.மு.க.,வினர் அன்னதானம் வழங்கினர். மாவட்ட செயலாளர் பெயரில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

Tags

Next Story