திண்டுக்கல் ஐ லியோனி திமுக கூட்டணி வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
திண்டுக்கல் ஐ லியோனி திமுக கூட்டணி வேட்பாளர் வாக்குகள் சேகரிப்பு
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வி எஸ் மாதேஸ்வரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரனை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, திமுக., அரசின் 2. இரண்டே முக்கால் ஆண்டுகள் சாதனை குறித்து நகைச்சுவையுடன் பேசி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு பொதுமக்களிடம் லியோனி வாக்கு சேகரித்தார். மேலும், பாரத பிரதமர் நரேந்திர மோடி ரோட்டில் லேகியம் விற்ப்பது போலவும், மந்திரவாதி போலவும் பேசி வருவதாக கூறியவர் பிரதமர் மோடி போல் பேசி விமர்சித்தார். சமீபத்தில் வெளியான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஏதுமில்லை எனவும், மதவாதிகள், மோசடி கும்பல்கள் உருவாக்கிய மாய பிம்பம் தான் மோடி எனவும் சாடினார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், எடப்பாடி பழனிசாமி யாரை எதிர்த்து நிற்கிறார் என்பதே தெரியவில்லை. போர் டே இல்லாத பஸ்ஸை அவர் ஓட்டுகிறார். தோல்வி பயத்தால் 8 முறை தமிழ்நாட்டிற்கு மோடி வந்துள்ளார். நரேந்திர மோடி ஆசிர்வாதம் செய்த அனைவரும் வீணாக இன்று போய்விட்டனர். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஎஸ் மாதேஸ்வரன் நான்கு லட்சத்தி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என செய்தி வாசிப்பது போல் வாசிக்கு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்விற்கு திமுக மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், பேரூராட்சி தலைவர் செயலாளர் அன்பழகன், மற்றும் கூட்டணி கட்சினர் பலரும் கலந்து கொண்டனர்.