திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம்

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம்

தேங்கி நிற்கும் மழைநீர்

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தினமும் 86 ரயில்கள் வந்து செல்கின்றன. தேனி மற்றும் பழனிக்கு நடுநயமாக இந்த ரயில்வே ஸ்டேஷன் விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

திண்டுக்கல் ரயில்வே ஜங்ஷனில் ரயிலுக்காக பொதுமக்கள் செல்லும் சுரங்கப்பாதை சாலையில் பயணிகள் யாரும் போக முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. பல நாட்களாக தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இந்த நாற்றத்தில் நடந்து செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் பாரா முகமாக இருப்பதால் பயணிகள் தினமும் அவதிப்படுகின்றனர்.

Tags

Next Story