கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் கைது

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவரை திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனசீர் பாத்திமா,இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் கடந்த ஜனவரி மாதம் நிலக்கோட்டை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், ஆனந்த் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா நடுபட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் விவேக் (வயது 32) என்பவரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லரை விற்பனை செய்தது தெரியவந்தது.இதை யடுத்து விவேக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.இந்த நிலையில் நடுப்பட்டியில் பதுங்கி இருந்த விவேக்கை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story