ஜவகர் சிறுவர் மன்றத்தில் கலை பண்பாட்டு துறை இயக்குனர் ஆய்வு
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதில் 16 வயதுக்கு உட்பட்ட 150க்கும் மேற்பட்ட ஜவகர் சிறுவர் மன்ற குழந்தைகளுக்கு யோகா, சிலம்பம், கராத்தே, கிராமிய நடனம், பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கைவினை பயிற்சிகள் வாரம் தோறும் சனி ஞாயிறு கிழமைகளில் அரசின் சார்பாக இலவச வகுப்புகள் திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
இதனை கலை பண்பாட்டு துறை இயக்குனர் S.R. காந்தி இன்று ஆய்வு மேற்கொண்டு பயிற்சி பெறும் குழந்தைகளோடு கலந்துரையாடினார். நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் புதியதாக துவங்கப்பட்ட ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்திற்கும் தேவையான இசை கருவிகள் பயிற்சி உபகரணங்கள் விரைவில் வழங்குவதாக கூறினார். குழந்தைகள் நேரத்தை ஆக்க பூர்வமாக பயன் படுத்திட வேண்டும் எனவும் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஜவகர் சிறுவர் மன்றம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் பெண் குழந்தைகள் அனைவரும் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார் ஆய்வின் போது நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார், தற்காப்பு கலை ஆசிரியர்கள் இராமசந்திரன், சரவணன், ஓவிய ஆசிரியர்கள் வெங்கடேஷ், விஜயகுமார் பரதநாட்டிய ஆசிரியைகள் தேவயானி, ஸ்ரீமதி , கிராமிய நடன ஆசிரியர் வினோத் மற்றும் உதவியாளர் பிரவீன் உடன் இருந்தனர.