படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!

படப்பிடிப்பு  புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!


கோவை ஈஷா யோகா மையத்தில் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனின் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று


கோவை ஈஷா யோகா மையத்தில் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனின் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று

கோவை:ஈஷா யோகா மையத்தில் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனின் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.லவ் டுடே படத்தின் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் ஆனது படப்பிடிப்பு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்த வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் விக்னேஷ் சிவனின் இயக்கும் இந்த படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என பெயர் வைத்துள்ளனர்.

எல்ஐசி என பெயர் வைத்ததற்கு ஏற்கனவே எதிர்ப்பு வந்த நிலையில் மறுபக்கம் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.ஈஷா யோகா மையத்தில் உள்ள நந்தி சிலை,லிங்க பைரவி, மீன் குளம் உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாக ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story