உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் மண் குவியல்: வாகன ஓட்டிகள் 'திக்... திக்

உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் மண் குவியல்: வாகன ஓட்டிகள் திக்... திக்
புழுதி பறக்கும் சாலை
உத்திரமேரூர் சாலையில் உள்ள மண் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்குவாரிகள்,

கிரஷர்களுக்கு செல்லும் லாரிகள் மற்றும் சென்னை புறநகர் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை எடுத்து செல்லும் லாரிகளும் இச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன. தற்போது, இச்சாலை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இச்சாலையில் பழையசீவரம் மற்றும் உள்ளாவூர் உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் மண் குவியலாக காணப்படுகிறது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் சிக்கி நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள மண் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதால் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண் குவியல்களை அகற்றி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story