திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நாகப் பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.


நாகப் பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

நாகப் பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடி ஏற் றத்துடன் தொடங்கியது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி. தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூர் திரவுபதியம்,,மன் கோயில் தீமிதிருவிழா நேற்று இரவு பூச்சொரிதல் விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நீண்ட நாள் திருமணம் நடைபெறாத ஆண் மற்றும் பெண்கள் அம்மாவாசை யன்று திரவுபதி அம்மனுக்குஅபிஷேகம் செய்து கோயிலில் உள்ள அரவானுக்கு பரிகார பூஜை செய்து அரவான் கழுத்தில் மஞ்சள் மற்றும் கயிரை தாலியாக கட். டினால் திருமண தோஷம் நீங்கி திருமணம் நடைபெ றும் என்பதால் மாதந்தோறும் அம்மாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெ றும்.

மேலும் திருவிழாவின் போது அரவான் களப்பலியன்று சேவல் பலியிட்டு அதன் ரத்தத்தை சாதத்து டன் கலந்து வழங்கப்படும் பலிசோறு பிரசாதத்தை குழந்தை பாக்கியம் இல் லாதவர்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக் கும் என்பது நம்பிக்கை. இந்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் 9 நாள் திருவிழா நேற்று இரவு பூச்சொரிதல், கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக திருக்கோயில் தெரு குளத்தில் இருந்து 100 க்கும் பெண்கள் பூத்தட்டுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து பூச்செரிிதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மன் விதியுலா காட்சி நடைபெற்றது.

இதையடுத்து அரியலூர் உடையார்பாளையம் சாமிதுரை பாகவதரர் குழுவினரால் மகாபாரத கதை தினம்தோறும் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 3ம்தேதி காலை திமிதி திடலில் படு களமும், அம்மன் கூந்தல் முடித்தலும் நடைபெறுகி றது. அதைத் தொடர்ந்து முக்கிய விழாவான தீமிதி திருவிழா அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. 4ம் தேதி தர்மர் பட் டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கப்படுகிறது. மறுநாள் 5ம் தேதி விடை யாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது . எற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உபயதாரர்கள் செய்து வடு கின்றனர்.

Tags

Next Story