நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா
மாற்றுத்திறனாளி தர்ணா
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளி திடீர் தர்ணா.
நெல்லை மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட ஒரு அரசு பஸ் நேற்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ் வள்ளியூரில் வந்த போது மாற்றுத்திறனாளி ஒருவர் அந்த பஸ்ஸில் ஏறி உள்ளார். அப்போது பஸ்ஸில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் இருந்தனர். இதனால் மாற்றுத்திறனாளிக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. எனவே மாற்றுத்திறனாளியான தனக்கு பஸ்ஸில் இருக்கை ஒதுக்கி தருமாறு கண்டக்டர் இடம் அவர் கேட்டுள்ளார். ஆனால் கண்டக்டர் இருக்கை ஒதுக்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி நாகர்கோவில் பஸ் நிலையம் வந்ததாம் பஸ்ஸை விட்டு இறங்கி பஸ் நிலையத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளி போராட்டத்தை கைவிட்டார். பின்னர் பாஷில் மாற்றுத்திறனாளிக்கு இருக்கை ஒதுக்காதது குறித்து போக்குவரத்து அதிகாரியிடம் புகார் மனு அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Next Story