பிப்.23 ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூரில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வருகின்ற பிப். 23 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கி பயன்பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப், தெரிவித்துள்ளார்.
Next Story