மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் - போக்குவரத்து துறை
போக்குவரத்துத்துறை
மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
- மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகளுக்கு மேல் ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
- ஸ்டிக்கர்கள் கிழிந்த முறையிலோ மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் அவர்களது துணையுடன் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story