மது விற்ற மாற்றுத்திறனாளி கைது
கோப்பு படம்
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற நபர் மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் சுரேந்திரன், 35. ரயில் விபத்தில் இரு கால்களும் துண்டான மாற்றுத்திறனாளி. இவர் டாஸ்மாக் கடைகளில் மது பான பாட்டில்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக வீட்டில் மது பான பாட்டில்கள் வைத்திருத்தார். இது குறித்த தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இவரை கைது செய்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story