வேலைக்குச் சென்ற கணவர் மாயம்
மாற்றுத்திறனாளி
புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம், காட்டு விளை பருதியை சேர்ந்தவர் ரஜினி குமார் மனைவி வனஜா. இவர்களுக்கு 16 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரஜினி குமார் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினி குமார் தனது 6 சென்ட் வீட்டு மனை பட்டாவை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வைத்து 7 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் லோன் எடுத்துள்ளார். லோன் தவணைத் தொகை மாதம் 13 ஆயிரத்து 658 ரூபாய் கட்ட வேண்டும். உடல் நிலை காரணத்தால் ரஜினி குமார் வங்கி கடனுக்கான மாதத் தவணையை சரியாக கட்டவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி வெளியூர் வேலைக்குசெல்வதாக கூறி சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மொபைலில் தொடர்பு கொண்டு உடனே ஊருக்கு வருவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் தற்போது மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.ரஜினி குமார் எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்ற விபரம் தெரியவில்லை. எனவே தனது கணவரை கண்டுபிடித்து தர வனஜா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.