பேரிடர் கால முன்னெச்சரிக்கை பணிகள் : செயல் அலுவலர் ஆய்வு 

பேரிடர் கால முன்னெச்சரிக்கை பணிகள் : செயல் அலுவலர் ஆய்வு 
பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு
பேராவூரணியில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து செயல் அலுவலர் ஆய்வு செய்தார்.

பேராவூரணி பேரூராட்சி பகுதியில், பேரிடர் கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, செயல் அலுவலர் பா.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின்படியும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பா. பழனிவேல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பேரூராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், ஏணிகள், புகை மருந்து அடிக்கும் இயந்திரம், பிளீச்சிங் பவுடர், கயிறு, மண்வெட்டி, கடப்பாறை, மரம் அறுக்கும் இயந்திரம், பாதுகாப்பு தலைக்கவசம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேராவூரணி பகுதியில், எவ்வித பிரச்சனையும் சமாளிக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சிவசுப்பிரமணியன், வீரமணி, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story