விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
தீயணைப்புத்துறை ஒத்திகை
விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை. இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி கிராமப்புற மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கம், கோனூர், காணை ஆகிய கிராமங்களில் தீயணைப்புத்துறை சார்பில் பேரி டர்கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர் சிவசங்கரன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ராஜவேலு மற்றும் தீயணைப்பு நிலைய பணி யாளர்கள் கலந்துகொண்டு பேரிடர் கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதாவது, மழைக்காலத்தின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது? ஏரி உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தால் அங்குள்ள மக்களை எப்படி மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது? ஏரி, குளம், குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கும் முறைகள் மற்றும் பலத்த காற்றின்போது சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் வழிமுறைகள் ஆகியவை குறித்து கிராம மக்கள், தன்னார்வலர்களுக்கு செயல் முறை விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.

Tags

Next Story