"காஞ்சி சங்கரா கலை கல்லுாரியில் பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை"

காஞ்சி சங்கரா கலை கல்லுாரியில் பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை

 பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அரக்கோணத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடைபெற்றது.
கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் விதம் குறித்து காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அரக்கோணத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று ஒத்திகை நடத்தினர். கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., பாலகுமார், தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி தீயணைப்பு அலுவலர் இ.சங்கர், பேரிடர் மேலாண்மைத் துறை வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அணி தலைவர் பிரதீப் பாட் தலைமையிலான குழுவினர் ஒரு இடத்தில் அணுக்கதிர் வீச்சால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது என, பாதுகாப்பு உடை அணிந்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். தொடர்ந்து ஒத்திகையை சிறப்பாக நடத்தியவர்களையும், அவர்களது செயல்களையும் காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி பாராட்டினார்.

Tags

Next Story