மதுராந்தகம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்

மதுராந்தகம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்
செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியில் இருந்து 1,100 கன அடி உபரி நீா் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியில் மதகுகளை உயர்த்த கட்டுமான பணிகள் நீர்வரத்தால் பாதிக்கப்படுவதால் உபரிநீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக திகழ்வது மதுராந்தகம் ஏரி. இந்த ஏரியை தூா் வாரி, 12 மதகுகளை அமைக்கவும், உபரி நீா் செல்லும் கலங்கல் ஆற்றில் செல்லும் வகையில் 50 செ.மீ. உயா்த்தவும் ரூ. 120 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் செயல்படுத்த கடந்த 6-6-2022-இல் பூமி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, மதுராந்தகம் பொதுப்பணித் துறை (நீா்வளப் பிரிவு) நேரடி கண்காணிப்பில் ஒப்பந்ததாரா் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மதுராந்தகம், சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால், மழை வெள்ளநீா் அதிக அளவில் மதுராந்தகம் ஏரிக்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் மதுராந்தகம் ஏரிக்கு 1,900 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. அதில் 1,100 கனஅடிநீரை கலங்கல் பகுதி வழியாக கிளியாற்றில் செல்ல மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனா். தொடா்ந்து நீா்வரத்து நிலவரத்தை பொதுப்பணித் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

Tags

Next Story