வரிகளை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிப்பு

வரிகளை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிப்பு

குடிநீர் இணைப்பு துண்டிப்பு 

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி கட்ட தவறினால் சட்ட நடவடிக்கைகள், ஜப்தி, இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் 2023-2024-ம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரியில்லா இனங்கள் செலுத்த வேண்டி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு தீவிர வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வரி மற்றும் வரியில்லா இனங்கள் செலுத்தாமல் அதிகப்படியாக நிலுவையில் உள்ள முதல் 100 நபர்கள் பட்டியலை வார்டு வாரியாக பொது இடங்களில் விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பொது மக்கள், வணிக பெருமக்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகள் மற்றும் வரியில்லா இனங்களை உடனடியாக செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆணையாளர் சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்

Tags

Next Story