திருவானைக்கோவிலில் பலிவீரன் நவகண்டம் சிலை கண்டெடுப்பு

திருவானைக்கோவிலில் பலிவீரன் நவகண்டம் சிலை கண்டெடுப்பு


திருவானைக்கோவிலில் பலிவீரன் நவகண்டம் சிலை கண்டெடுப்பு


திருவானைக்கோவில் கிராமத்தில் உள்ள பலிவீரன் சிலையை, ஐந்து தலைமுறைகளாக இப்பகுதியினர் வழிபாடு செய்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவானைக்கோவில் கிராமம். இப்பகுதி சாலையோரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில், தன் கழுத்தை தானே கத்தியால் அறுப்பது போன்ற ஆண் வீரன் உருவ கற்சிலை பல ஆண்டுகளாக உள்ளது. கி.பி.,17ம் நுாற்றாண்டை சார்ந்த அந்த சிலையில், இடுப்புக்கு கீழே மண்ணில் புதைந்துள்ளதால் சிலையை முழுமையாக அறிய முடியவில்லை.

இதுகுறித்து வெற்றி தமிழன் கூறியதாவது: தமிழகத்தில் எதிரிகளோடு போர் தொடுக்க வீரர்கள் படையெடுத்து செல்லும்போது, போரில் வெற்றி வேண்டி படைவீரர்களில் ஒருவரை தேர்வு செய்து, அந்த வீரன் தன் கழுத்தை தானே அறுத்து பலி கொடுப்பது வழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வாறான உயிர் துறத்தலை அவிபலி, களபலி, தலைபலி எனவும், உயிர் துறக்கும் வீரனுக்கு சிலை வைத்து பலிவீரன் நவகண்டம் சிலை என அழைத்துள்ளனர். திருவானைக்கோவில் கிராமத்தில் உள்ள பலிவீரன் சிலையை, ஐந்து தலைமுறைகளாக இப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story