கெங்கவல்லி பகுதியில் ஐரோப்பிய ஊசிவால் வாத்துகள் கண்டுபிடிப்பு

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீராகனூர் அருகே நல்லூர் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பின் போது நல்லூர் ஏரியில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த ஊசிவால் வாத்துகள் ஒரே இடத்தில் 1200க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு நடைபெறும். அதன்படி 2023- 2024 ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணியானது, நீர் பறவைகள், நிலப் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது, இன்னிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனங்கள் ஆட்சி சரகத்தின் வாயிலாக வீரகனூர் அருகே உள்ள நல்லூர் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது, இதில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த ஊசிவால் வாத்துகள் ஒரே இடத்தில் 1200க்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது,இவை வீட்டு வாத்தைவிடச் சிறியவை. சுமார் 65 செ.மீ நீளமிருக்கும். இவற்றின் அலகு ஈய நிறத்திலும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள், கருப்பு நிறத்தில் இருக்கும். இந்தப் பறவைகளில் ஆண், பெண் பறவைகளுக்கு இடையில் குறிப்பிடதக்க வேறுபாடுகள் உள்ளன.ஆண்பறவையின் உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். தலை சாக்லெட் நிறத்தில் இருக்கும். தலையில் இருந்து இரு பக்கங்களிலும் வெள்ளை பட்டைகள் கீழ்நோக்கிச் சென்று கழுத்து வெள்ளையோடு சேரும். மார்பு, வயிறு ஆகியவை வெண்மையாக இருக்கும். இவற்றின் கூரிய நீண்ட வால் இவற்றை நன்கு அடையாளம் காணஉதவுகிறது என்றும், பெண் பறவையின் உடலின் மேற்பகுதி பழுப்பும் வெளிர் மஞ்சளுமான சிறு வட்டங்களைக் கொண்டிருக்கும். இதற்கு ஆண் பறவைக்கு உள்ளது போன்ற நீண்ட கூரிய வால் கிடையாது எனவும் ஆணும் பெண்ணும் இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ நாணல் புதர் நிறைந்த ஏரிகளில் திரியக்கூடியன. பிற வாத்துகளோடு கலந்தும் காணப்படும். இவை தானியங்களையும், தாவரப் பொருட்களையும் முதன்மை உணவாக உட்கொள்கின்றன என கெங்கவல்லி வனங்கள் ஆட்சி சரகத்தினர் தெரிவித்துள்ளனர்,

Tags

Next Story