சுடுமண்ணால் ஆன குந்தளம் பாவை கண்டுபிடிப்பு
சிவகாசி அருகே 2 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன் பாவை கண்டுபிடிக்கப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.
முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று 30.7 மி. மீ உயரமும் 25.6 மி. மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் இதே போன்ற சுடுமண் பொம்மை கண்டறியப்பட்ட நிலையில் முன்னோர்கள் கலைநயத்துடன் சிகைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதும் அழகிய வேலைப்பாடுகளுடன் சுடுமண் பொம்மை கலைநயத்துடன் தயாரித்துள்ளதும் இதன் மூலம் தெரிய வருவதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.