ஐயனார் சிலை கண்டுபிடிப்பு
ஐயனார் சிலை கண்டுபிடிப்பு
அரியலூர் மாவட்டத்தில் பண்டைய சிற்பங்கள் குறித்து ஆய்வு பணி நடைப்பெற்ற நிலையில் அபூர்வமான ஐயனார் சிலை கண்டெடுக்கபட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பண்டைய சிற்பங்கள் குறித்து மேற்பரப்பு கள ஆய்வு பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பெரியதிருக்கோணம் கிராமத்தில் 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட ஐயனார் சிலை ஒன்று கண்டெடுக்கபட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பண்டைய சிற்பங்கள் ஆய்வாளர் ஶ்ரீதர் கூறும்போது தமிழ்நாட்டில் கண்டெடுக்கபட்ட ஐயனார் சிற்பங்களில், இந்த சிலை வீராசன கோலத்தில் உள்ளதாகவும், இது அபூர்வமான ஒன்றாகும் என தெரிவித்தார். இதில் தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர்கள் பூபதி, முனைவர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story