செம்பரையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

செம்பரையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம்,

பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டம்,பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டம், குறுவை தொகுப்பு திட்டம், திருந்திய நெல் சாகுபடி, தமிழ்நாடு அரசின் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்தல், நெல்லில் எந்திர நடவு, வேளாண்மையில் உயிர் உரங்கள் பயன்படுத்துதல், பாதுகாப்பாக பயிர் பாதுகாப்பு மருந்துகள் கையாலும் முறைகள்,

களைக்கொல்லி பயன்படுத்தும் முறைகள் வேளாண்மை துறையில் உழவன் செயலி மூலம் பதிவு செய்து மானிய விலையில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, கோடை பருவ எள் சாகுபடி, உளுந்து பயிர் சாகுபடி நவீன தொழில் நுட்பங்கள் அடங்கிய துண்டபிரசுரங்கள் கையேடு வழங்கினார்.குமுளூர் வேளாண்மை கல்வி நிலைய உதவி பேராசிரியர் ஹரிஹரசுதன் எள்,

உளுந்து மற்றும் நெல் பயிர்களில் கடைபிடிக்கப்படும் முக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் எள் மற்றும் உளுந்து பயிரில் வயல் ஆய்வு செய்து பூச்சி நோய் தாக்குதல் கண்டறிந்து அறிகுறிகள் குறித்து விளக்கம் அளித்து உரிய பயிர் பாதுகாப்பு மருந்துகள் பயன்படுத்துதல், நீல நிற அட்டை,

மஞ்சள் நிற வண்ண அட்டை இன கவர்ச்சி பொறி வைத்தல் உயிர் உரங்கள் பயிர் பூஸ்டர்கள் டி ஏ பி இலை வழி கரைசல் தெளிப்பு முறைகள், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வேறுபாடு அறிதல் ஆகியவற்றை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் எடிசன் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் விவசாயிகள் பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கம் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.இதற்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு கார்த்திக், தமிழ்மணி முன்னோடி விவசாயிகள் திரு துரை செல்லையா, ஞானவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் செம்பரை கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . மேலும் இந்த விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Tags

Next Story