குமரி தூய்மை பணியாளர்ககளுடன் கலந்துரையாடல்

கன்னியாகுமரில் குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாய் மாறுவோம் என்ற தலைப்பில் தூய்மை காவலர்களுடான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பணியாளர்களுடர் கலந்துரையாடல்கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வட்டம் பகுதியில் குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாய் மாறுவோம் என்ற தலைப்பில் தூய்மை காவலர்களுடான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு தூய்மை காவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களிடையே கலந்துரையாடினார்.
முன்னதாக அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், துறை அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் ”குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாறுவோம்” என்ற முழக்கத்தினை வலியுறுத்தி நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவை தான் வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்பதை நான் உணர்கிறேன். அவற்றை அழிக்கும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சாந்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், துறை அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
