கத்தரி செடியில் நோய் தாக்குதல்

கத்தரி செடியில் நோய் தாக்குதல்

கத்தரி செடிகளில் நோய் தாக்குதல்

திண்டுக்கல் சுற்றுப்புற பகுதியில் கத்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நோய் தாக்குதலால் வருவாய் இழந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான பில்லம நாயக்கன் பட்டி, பெரிய கோட்டை, புகையிலைப்பட்டி, ஜம்புலியம்பட்டி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் கத்திரிக் காய் சாகுபடி நடக்கிறது. கத்திரிக் காய் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு கிலோ ரூ.60 வரை விற்பதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில் கத்திரி செடிகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் போதிய காய்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

Tags

Next Story