கரும்பு பயிர்களில் நோய் தாக்குதல்; விவசாயிகள் கவலை
கரும்பு பயிர்களில் ஏற்பட்ட மர்ம நோய் தாக்குதலால் சங்ககிரி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர், சென்றாயனூர்,பெரமாச்சிபாளையம், சோழக்கவுண்டனூர்,கைகோலபாளையம், அரசிராமணி வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், கோனேரிபட்டி,காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி,இரமக்கூடல்,காவேரிபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆலை கரும்பு சாகுபடி செய்துள்ளனர் அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் கடந்த ஒரு மாதமாக கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வருகிறது .
மேலும் வளர்ச்சி குன்றி கருப்பு நிறத்தில் திட்டு திட்டுகளாக காட்சியளிக்கிறது இதனால் விவசாயிகள் கரும்பு பயிரில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் தெளித்தும் பயன் இல்லாததால் விரக்தி அடைந்து ஒரு சில விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்து வருகின்றனர். இந்நிலையில் மழை காலத்தில் கரும்பு பயிர்கள் செழித்து வளர்ந்து வந்தது இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் கரும்பு பயிரில் மர்ம நோய் தாக்கி கரும்பு பயிர்கள் கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.