கரும்பில் நோய் கட்டுப்பாடு செயல் விளக்க கூட்டம்

கரும்பில் நோய் கட்டுப்பாடு செயல் விளக்க கூட்டம்

கள்ளக்குறிச்சியில் கரும்பில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சியில் கரும்பில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.

கடலூர் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக கரும்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை இணைந்து நடத்திய கரும்பியல் நோய் கட்டுப்பாடு செயல் விளக்க கூட்டம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் நடைபெற்ற நோய் கட்டுப்பாடு செயல் விளக்க கூட்டத்திற்கு ஆலையின் செயலாட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார்.

தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் குருமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், பேராசிரியர் சசிகுமார், கரும்பு ஆராய்ச்சி நிலையம் பூச்சிகள் துறை பேராசிரியர் துரைசாமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கரும்பு பயிரில் தாக்கும் நோய்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை குறித்தும், விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டன.

தொடர்ந்து கரும்பில் மகசூல் பெறுவதற்க்கு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தொடர்ந்து தரமான விதைகளை தேர்வு செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்கள் அனிதா, ஜெயச்சந்திரன், கரும்பு அலுவலர் முருகேசன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரைஆலை கரும்பு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story