வெற்றிலை கொடியில் நோய் தாக்கம் - ஆலோசனை வழங்க கோரிக்கை.

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெற்றிலை கொடிகளில் கள்ளி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனைகளை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை பகுதிகளில் விவசாயிகள் வாய்க்கால் பாசன முறையில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது வெற்றிலைக் கொடிகளில் நோய் தாக்குதல் பரவி வருகிறது. இதனால் கொடிகள் வளர்ந்து வருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், கொடிகளில் பரவி வரும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டாலும் நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படாமல் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது கரூர் மாவட்டத்தில் அதிகமாக வெயிலடித்து வருவதால், வெற்றிலை கொடிகளில் கள்ளிப் பூச்சி நோய் தாக்குதல் பரவியுள்ளது. இதனை தடுக்க தோட்டக்கலை துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story