விவசாயிகளுக்கு நெல்லில் நோய் தடுப்பு மேலாண்மை பயிற்சி

விவசாயிகளுக்கு நெல்லில் நோய் தடுப்பு மேலாண்மை பயிற்சி

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

பெரியகுளத்தில் விவசாயிகளுக்கு நெல்லில் நோய் தடுப்பு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயமங்கலம் பகுதியில் , பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் பூச்சிகள் துறை மற்றும் பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய நெல் ஆராய்ச்சி மையம் இணைந்து நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சுகன்யா கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி தலைமை உரையாற்றினார்.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் ராஜாங்கம், தேனி வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய நெல் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி (வேளாண் விரிவாக்கம் ) முத்துராமன், முதன்மை விஞ்ஞானி ( பூச்சியியல் ) ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன், இணை பேராசிரியர் (பயிர் நோயியல்) கல்பனா ஆகியோர் தொழில்நுட்ப உரையாற்றினர்.

பூச்சியியல் இணை பேராசிரியர் சண்முகம் நன்றி உரையாற்றினார். விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு முதல் நிலை மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் பாஸ்கரன் தொழில்நுட்ப செயல் விளக்கம் அளித்தார். நெல் விவசாயத்தின் போது விவசாயிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் , பூச்சிகளை ஒழிக்க பயன்படுத்தப்பட வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட விவரங்களை நிபுணர்கள் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன .இந்த நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story