தமிழ் பேரரசு கட்சி தலைவர் உள்ளிட்ட 11 பேர் மீது உள்ள வழக்கை ரத்து: உத்தரவு

தமிழ் பேரரசு கட்சி தலைவர் உள்ளிட்ட 11 பேர் மீது உள்ள வழக்கை ரத்து: உத்தரவு
வழக்கில் தொடர்பு உடையவர்கள்
தமிழ் பேரரசு கட்சி தலைவர் கௌதமன் உள்ளிட்ட 11 பேர் மீது உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 30.112020 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் வ. கௌதமன், மக்கள் காவலர் முடிமன்னன், தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகளும் நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கேட்டு போராட்டம் நடத்தினர்.

அப்பொழுது நடைபெற்ற அண்ணா திமுக ஆட்சியின் தொழில்துறை அமைச்சர் சம்பத், மக்கள் போராளி வ. கௌதமன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் முன்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி 19 பேருக்கு வேலை கொடுப்பதாக அறிவிப்பினை வெளியிட்டார்கள். ஆனால் மாவட்ட காவல்துறை மக்கள் போராளி வ. கௌதமன், மக்கள் காவலர் கு.முடி மன்னன் , மாவட்டத் தலைவர் ரகுபதிஅவர்கள் மீதும் தமிழ்ப் பேரரசு கட்சியினுடையநிர்வாகிகள் மீதும் விவசாயிகள் 13 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுவது,

ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியரை வேலை செய்யாமல் தடுப்பது, கொலை மிரட்டல் விடுப்பது, கொரோனா தொற்றினை பரப்புவது போன்ற பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்ந்தது.இவ் வழக்கானது செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கினை ரத்து செய்யக்கோரி தமிழ் பேரரசு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அன்பு முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் கே.பாலு, ஜோதி மணியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.அரசு தரப்பில் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதி அரசர்கள் இவ்வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவினை இன்று செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags

Next Story