செலவுகளை கண்காணிக்க தவறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

செலவுகளை கண்காணிக்க தவறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

கோப்பு படம் 

செலவுகளை கண்காணிக்க தவறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை அரசு தனித்தனியாக, பஞ்சாயத்து வளர்ச்சி பொது நிதி மற்றும் மின் செலவின நிதி என, பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறது. அதை, மின் செலவின நிதி, மின் கட்டணத்தை தவிர வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு வழங்கப்படும் நிதி உபரியாக இருக்கும் பட்சத்தில், அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாயை மட்டும், பஞ்சாயத்து, பொதுநிதியில் சேர்த்து, வளர்ச்சி பணிக்கு செலவிட அனுமதி அளித்து, கடந்த மாதம் அரசு உத்தரவிட்டது.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் யூனியனுக்கு உட்பட்ட, 14 பஞ்சாயத்துகளில்,அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக, 2 லட்சம்ரூபாய் வரை எடுத்து,பொது நிதிக்கணக்கில் சேர்த்து செலவிடப்பட்டது. இதை, ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து கணக்குகளை தணிக்கை செய்ததில் தெரிய வந்தது. இதை கண்காணிக்க தவறிய, துரிஞ்சாபுரம் கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி என்பவரை, பணியிடை நீக்கம், செய்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட, 14 கிராம பஞ்சாயத்து செயலர்களுக்கு உரிய விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

Tags

Next Story