திருப்பூரில் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் பணியிடை நீக்கம்!

திருப்பூரில் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்

திருப்பூரில் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூரில் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் பணியிடை நீக்கம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மண்டல பொது மேலாளராக மாரியப்பன் பணியாற்றி வந்தார். இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார்.

இந்நிலையில் மாரியப்பனை பணியிட நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சம் காட்டியது உள்ளிட்டவை தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story