மேட்டூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - வாக்குப்பதிவு தாமதம்

மேட்டூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - வாக்குப்பதிவு தாமதம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

மேட்டூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள,மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. தேர்தல் நடத்தும் பணியில் 1,545 பேர் ஈடுபடுகின்றனர். மேட்டூர் தொகுதியில் இன்று காலை 7. மணி முதல் முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. இந்நிலையில் மாதா கோவில் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சென்மேரிஸ் மேல்நிலை பள்ளியில் பாகம் எண் 106 -ல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டனர். பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு காலதாமலமாக மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags

Next Story