52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைப்பு

52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைப்பு

52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைப்பு

வேலூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் ஒவ்வொரு நாளும் 200 டன்களுக்கு மேல் குப்பைகள் சேருகிறது. இதில் பல டன்கள் மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி கழிவுகள் மட்டுமே அடங்கும். இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவி வந்த நிலையில், கழிவுகளை தங்களுக்கான எரிபொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமென்ட் ஆலைகள் தெரிவித்தன. இதில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா, திண்டுக்கல் போன்ற இடங்களில் உள்ள சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Tags

Next Story