கீழ்பென்னாத்தூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
கீழ்பென்னாத்தூர் தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (18.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார் . மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Next Story