பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூருக்கு அனுப்பி வைப்பு!

பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூருக்கு அனுப்பி வைப்பு!

வாக்குப்பதிவு எந்திரங்கள் 

குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூருக்கு அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்டு பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. தாலுகா அலுவலக வளாகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீல் அரசியல் கட்சி பிரமுகர்கள், தாசில்தார் சித்ராதேவி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வடிவேலு ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

தொடர்ந்து பழுதான 24 வாக்குப்பதிவு எந்திரங்களை வாகனம் மூலம் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம், தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ், அ.தி.மு.க. ராசிசதீஷ், எஸ்.சரத், புதிய நீதி கட்சி நகர செயலாளர் எஸ்.ரமேஷ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story