திருப்பூர் : தென்மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு

திருப்பூர் : தென்மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு
X

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

அதிமுக சார்பில் முன்னால் அமைச்சரும் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்

தென் மாவட்டங்களான தூத்துக்குடி , கன்னியாகுமரி, திருநெல்வேலி , தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுவரை 32 பேர் உயிரிழந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ஏராளமான அமைப்பினர் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இருந்து அதிமுக சார்பில் முன்னால் அமைச்சரும் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தென் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தண்ணீர் பாட்டில்கள், பெட்ஷீட் , துணி வகைகள் அரிசி , பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இரண்டு கண்டெய்னர் லாரிகளில் இன்று அனுப்பி வைத்தார்.

தொடர்ந்த செய்தியாளர்களை சந்தித்த அவர் தென் மாவட்டங்களில் மழை நின்று ஆறு நாட்களாகிய மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை எனவும் அரசு இவ்விவகாரத்தில் மெத்தனப்போக்காக செயல்படுவதாகவும், தமிழக முதல்வர் போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றாரே தவிர வெள்ளம் பாதித்த இடங்களை பார்க்கவில்லை எனவும் , ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக முழுவதிலிருந்து அதிமுகவினர் தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும் , ஆனால் திமுக அரசு மெத்தனபோக்காக செயல்படுவதாகவும் ஆறு நாட்களாகியும் அங்கு அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வில்லை எனவும் குற்றம் சாட்டினார். இந்நிகழ்வின் போது அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story