ரூ.15.5 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

15.5 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டதுடன் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெற மக்கள் அவதிபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு மூலம் சூலூர் விமானப்படையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமும் சாலை மார்க்கமாக லாரிகள் மூலம் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கபட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் செயல்பட்டு வரும் மார்டின் குரூப் நிறுவனம் சார்பில் ரூபாய் 15.5 லட்சம் மதிப்பிலான மூவாயிரம் நிவாணப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மூன்று லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

நாளை இந்த பொருட்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அம்மாவட்ட நிர்வாகத்தினர் நேரடியாக விநியோகம் செய்ய உள்ளனர்.

Tags

Next Story