வெள்ள நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைப்பு
திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரண உதவி பொருட்களை எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்தனர்
திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரண உதவி பொருட்களை எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரண உதவி பொருட்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அனுப்பிவைத்தனர். திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லாத்தம்பி மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வநாதன் ஆகியோர் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள். அரிசி மளிகை பொருட்கள் துணி வகைகள் மற்றும் மாத்திரை மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை லாரி மூலம் அனுப்பி வைத்தனர் இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் சு.அரசு, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, ஒன்றிய துணை செயலாளர் சங்கர், கந்திலி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் மோகன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வி.எஸ்.கார்த்திக், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் மோகன் மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தார்கள்.
Next Story