தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி!
தேர்தல் பணி
வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி நடைபெற்றது. பணியினை கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (18.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story