புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பும் பணி தொடக்கம்
கோப்பு படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது.
அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ஒவ்வொருவருக்கும் தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பும் பணி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முதல் கட்டமாக 21 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story