ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

சிவகங்கை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தென்மாவட்டங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 

சிவகங்கை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தென்மாவட்டங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கூட்டாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவும், இதனால், தென்மாவட்ட மக்களின் உடைமைகள், வீடுகள், பயிர்கள் என வாழ்வாதாரம் அனைத்தும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், நமது அருகில் உள்ள பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்கள் பசியாலும், பட்டினியாலும், வாழ்வாதாரம் இழந்தும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு, செய்வதறியாது, கையறு நிலையில், மிகவும் துன்புறுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாம் செய்யும், சிறு உதவி கூட பெரிய அளவில் பயன்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு, உதவ வேண்டும் என்ற அடிப்படையிலும், மனிதநேயத்தையும், மனித மாண்பையும் உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தனது பங்களிப்பைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட மையம் சார்பாக வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் குழந்தைகள், பெண்கள் முதல் முதியவரை, ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரிசி, தண்ணீர் பாட்டில், போர்வை, பாய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கெட் பாக்கெட், பால்பவுடர், பிரட் பாக்கெட், நாப்கின் உள்ளிட்ட பொருட்களில் எவற்றையாவது, வாங்கி, தங்களின் பங்களிப்பாக, ஒப்படைத்திடுமாறும், நமது உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து நிவாரண பொருட்களையும், சேகரித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் விரைந்து ஒப்படைத்திடுமாறும், நிவாரண பொருட்களை சேகரித்திட உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 13 கிளைகளில் இருந்தும், ஏராளமான நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் வளர்ச்சித் துறை ஊழியர்களால் அளிக்கப்பட்டது. அதன்படி, சுமார் 3 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை, உடனடியாக, சிவகங்கை மாவட்ட மையம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பட்டது.

Tags

Next Story