நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

ஈரோட்டிலிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஈரோட்டிலிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது‌. இதனால் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பிஸ்கட், போர்வைகள்,எண்ணெய், தண்ணீர் கேன்கள் ,வெண்ணை,அரிசி என நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 315 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தங்க விக்னேஷ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் அனுப்பி வைத்தனர். தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story