திருப்பூரில் தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரம் அனுப்பி வைப்பு

X
வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பி வைத்தார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தல் - 2024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
உடன் திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த் உதவி ஆட்சியர் (பயிற்சி) கிருத்திகா விஜயன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.
Next Story
