காங்கேயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

காங்கேயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

காங்கேயத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைப்பு

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்கு சாவடிக்கு துப்பாக்கி ஏந்திய காவலருடன் வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

நாளை ஏப்ரல் 19ஆம் தேதி ஈரோடு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் 28 மண்டலத்திலுள்ள 295 வாக்குசாவடிகளுக்கும் வாக்கு இயந்திரங்கள், கன்ட்ரோல் மெஷின்கள், பேனல் மெஷின்கள் ஆகியவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 28 வேனில் வாக்குச்சாவடி நிலைய தேர்தல் அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பலத்த பாதுக்காப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு நாளை வாக்கு செலுத்தும் நேரத்திற்கு முன் திறக்கப்படும் வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பணியில் 2 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தமிழ்நாடு போலீஸ், ஆந்திர மாநில ஊர்க்காவல் படை மற்றும் குஜராத் மாநில போலீசார் உட்பட 370 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story