ஆடு மேய்ப்பதில் உறவினர்கள் இடையே தகராறு: தம்பதியை தாக்கிய முதியவர் கைது

ஆடு மேய்ப்பதில் உறவினர்கள் இடையே தகராறு: தம்பதியை தாக்கிய முதியவர் கைது

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்

அரவக்குறிச்சி அருகே ஆடு மேய்ப்பதில் உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பதியை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஆடுகளை மேய்ப்பதில் உறவினர்கள் இடையே தகராறு. கணவன் மனைவியை தாக்கிய முதியவர் கைது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வரிக்காப்பட்டி அருகே உள்ள நாச்சிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 65. இவரது மனைவி சாமியாத்தாள் வயது 55.

இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லுசாமி வயது 63. சுப்பிரமணிக்கும் நல்லுசாமிக்கும் அப்பகுதியில் அருகருகே விளை நிலம் உள்ளது. இதில் ஆடுகளை மேய்ப்பது தொடர்பாக இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தில் நல்லுசாமி தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சுப்பிரமணி நல்லுசாமியை தட்டி கேட்டு உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த நல்லுசாமி, சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் ஆகியோரை தகாத வார்த்தை பேசினார். பின்னர் சுப்பிரமணியை தடியால் தாக்கி காயப்படுத்தி துன்புறுத்தி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி மனைவி சாமியாத்தாள் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக, நல்லுசாமியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story